“வருக, வருக, வாழ்க வளமுடன்” என்று உங்களை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம்

PiLLaiyaar Saraswathi

நீங்கள் எங்கள் இல்லத்திற்கு வந்தவுடன் உங்களுக்கு அருள் வழங்குபவர்கள் எங்கள் இல்லத்து வரவேற்பறையில் குடிகொண்டிருக்கும் ஆடியோ பிள்ளையாரும்   சரஸ்வதி அம்மனும்.  1998ல்  வாங்கியபின் 1999லிருந்து வசித்துவரும் இனிய அடுக்ககத்தில் இசைப்பெட்டிகளின்மேல் இருப்பதால் அவருக்கு ஆடியோ பிள்ளையார் என்று பெயர் சூட்டிவிட்டோம்.  பிள்ளையாருக்குப் பக்கத்தில் இருக்கும் சரஸ்வதி அம்மன் இந்த வருடம் நவராத்திரி சரஸ்வதி பூஜைக்குமுன் கிடைக்கப் பெற்றோம்.  மயிலாடுதுறைக்கும் திருவாரூருக்கும் இடையில் இருக்கும் கூத்தனூர் சரஸ்வதி அம்மனைத் தரிசனம் செய்யும் பேறு கடந்த இருபதுவருடங்களுக்கு மேலாகக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் செல்லும் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு உறவினர்களை  /நண்பர்களை அழைத்துச்செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.   உங்களையும் ஒருமுறை அழைத்துச்செல்லும் இறையருள் கிடைக்க வேண்டுகிறோம்.